Monday, October 12, 2015

நாள் 3


என்றுமில்லா சந்தோசம்
எந்தன் மனதில்...
இருந்தாலும் தயக்கம்
பிறருடன் பகிர..
உள்ளம் கலந்தது
உறவும் பூத்தது..
     பார்த்த நாள்முதல்
     மனதில் தேங்கிய
     நினைவுகளுக்கு விடுதலை..
     சிறகு இல்லாமல்
     வானில் பறப்பதாய்
     உணர்வு..
ராகமில்லா பாடலுக்கு
ராகமாக..
காட்டு மூங்கிலிலே
நாதமாக..
பாலை நிலத்திற்க்கொரு
நீரூற்றாய்....
     தயக்கங்கள் என்றுமே
     பாதை காட்டாது..
     சலனங்கள் மட்டுமே
     சங்கீதம் ஆகாது..
சுதியோடு லயம் சேர்ந்து
ஒன்றான நெஞ்சம்..
இனி இந்த காற்றுக்கு

தடை ஏது?

நாள் 2

இனிதே கழிந்தது
இன்றைய பொழுது..
களிப்பாய் இருக்குது
காணும் கனவுகள்..
புதிதாய் இருந்தது
பார்த்த செய்கைகள்..
புதிராய் இருந்தது
பாவையின் மனது..
     மனதைத் திறந்திட
     திறவுகோல் ஒன்று
     மளமளவென வார்த்தை வந்தது..
     மனதின் குழப்பம்
     தெளிவாய் தெரிந்தது
     உதவிக்கு வரவே
     மனதில் எண்ணம்..

     ஏற்கப்படுமா? 

Sunday, October 4, 2015

காதல் - 1

மனநிறைவுடன் வலம் வந்தாலும்
மனதின் மூலையில் சிருதவிப்பு..
மறுத்துவிட மனது கணக்கிட்டாலும் 
மௌனங்களே மொழியாய் (பாஷையாய்)..
கண்களால் பேசியே தினம் 
வதைத்திடும் பாவை..
கனவாய் இருந்தால் மனதில்
குழப்பம் எது??
நனவாய் இருப்பதால்
நிம்மதி அழியுமோ?
பார்க்கும் பார்வையில் (கண்ணில்)
மூடும் இமையில்
உயிர் தரும் மூச்சில்
உரிமை கொண்டு ஊடல் கொண்டு..
கண்கள் பனிக்க 
காணும் பாவையே..
என்னை விடு.... எண்ணவும் விடு..
என் நினைவுகள் இனிக்குது..
நிலவும் உண்மைகளோ மறுக்கிறது..
இன்பமான குழப்பம்..
இனிய புத்தாண்டில் துவக்கம்..

1-ஜனவரி -1999

புத்தாண்டு வரவேற்பு..

இன்பங்கள் என்றும் இருக்க
இனிமை எங்கும் இருக்க 
நன்மைகள் நாளும் பெருக..
நாடென்றும் நலம் பெற..

 இனிதே பிறந்தது
    இருபதாம் நூற்றாண்டின் 
 கடைசி குழந்தை..

வளம் பல தந்தே
வளரும் என்ற 
நம்பிக்கை கொண்டு
மனமகிழ்வுடன் வரவேற்கிறேன்...

1-ஜனவரி -1999