Wednesday, September 21, 2016

25.01.1999


வானத்து வெண்ணிலவு
வெட்கம் வரும்போதெல்லாம்
மெகா முக்காட்டில் தன் முகத்தை
மறைத்துக்கொள்வாள்..
தென் சிந்தும் நறுமலர்கள் ஒரு போதும் தேடாது...
தேடிவரும் வண்டினமே...
பச்சை பசும்புல்வெளியும்
பரந்திருக்கும் காடுகளும்
தென்றல் தழுவிச்செல்ல
ஒருபோதும் மறுப்பதில்லை..
கருமேகம் திரண்டு வரும்..
குளிர் காற்று வந்துலாவும்
சில்லென்ற மழைத்துளிகள்
சிந்து பாடி பூமி வரும்.
அதை பார்க்க ஆடாது இருந்திடுமா?
அழகிய மயிற்கூட்டம்..
உயர்ந்து நிற்கும் மலைமுகடு..
முத்தமிடும் மேகங்கள்..
ஆற்றுப்பெண் நடந்தாலும்
சுழல் கொண்டு ஓடினாலும்
ஆர்ப்பரித்து அருவியாகி
ஆவி பறக்க விழுந்தாலும்..
அழகென்ன..
சின்னவிழி பார்வையிலே..
சிறைபடும் இனிமையென்ன..
இயற்கை எல்லாம் ரசிப்பதற்கே..
இன்னுயிரே..உன்னைப்போல்
கொஞ்சிப்பேசும் கோகிலமே..

வந்து உயிர் கலப்பதென்னாள்

23.01.1999


யோசிக்க யோசிக்க
எதுவுமே மனதில் தோன்றவில்லை..
உன்னைத்தவிர..
நான் நேசிக்கும் என்னுயிரே..
நேரில் முகம் பார்க்காமல் நாள் போக மறுக்கிறது..
பேசும் மொழி கேட்க என் செவியும் துடிக்கிறது..
வெட்கத்தினால் சிவக்கும் உன் முகம் பார்க்கையிலே..
செக்கச்சிவந்த அந்தி மாலை சூரியனே நினைவுக்கு..
உன் செங்கோவை இதழினிலே
சிறுகவிதை எழுத வேண்டி நான் கேட்ட யாசகம்
உன் நினைவில் உள்ளதா?
என் கண்விழியின் ஒளியே..
என் கவிதைகளின் உருவே..
செங்கமல மலர் முகத்தின்
சிறுநகையின் நறும்பொருளே..
இன்கவிதை இதழ்கவிதை
எழுத இன்னும் என்ன தயக்கம்
ஓடோடி நான் வருவேன்
உனைக்கான அனுதினமும்
பாராமல் இருக்காதே..
பதில் சொல்ல மறுக்காதே..
காலங்கள் மாறினாலும்
காதல் என்றும் மாறிடாது
கவிதை சொல்ல நானிருப்பேன்

கனவெல்லாம் வந்திடுவாய்..

22.01.1999


இனியவளே..
என் நினைவுகள் என்னை ஆளும்
நிமிடங்கள் மிகக்குறைவு..
எப்படி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினாய்..
என்னை வேன்றுமென்ற என்னவளே..
என்றோ நான் என்னை உனக்கு தந்துவிட்டேனே..
மண் கலந்த நீராக உன் மனதோடு
நான் என்றோ கலந்து விட்டேன்..
கண்ணே..
இமையாக நானிருக்கிறேன்..
தேனினிமை தேவதையே..
உன் சொல்லினிமை, மொழியினிமை
உன்னை பார்ப்பதே இனிமை..
சுற்றிவரும் சிறுவிழியால்
என் மனதை அலையவிட்டாய்..
உன் பார்வையாலே எனை அணைத்து
பரிவுடனே தாலாட்டுகிராய்..
அன்பே..
உன் மடியில் தலைவைத்து
எனை மறந்து நானுறங்க..
உலகத்தின் இன்பமெல்லாம்
அள்ளி அள்ளி நீ வழங்க என்று வருவாய்..
என்னுயிரே..
காத்திருக்கும் நாளெல்லாம்

கண்ணுறக்கம் தொலைக்குதடி...

21.01.1999


எவ்வளவு இனிமையாக இருந்தது
இன்று நீ சொன்ன அந்த வார்த்தைகள்..
இனிய இசையைப்போல அல்லவா
in காதில் ஒலித்தது..
எத்தனை அழகாக இருந்தது
நீ இன்று வெட்கப்பட்டு பார்த்த
அந்த மோகப் பார்வை..
அன்பே.. இன்று முழுமையும் நான்
நனவுலகில் இல்லை..
கனவு வானில் காதல் தேசத்தில்
உன்னோட கூட தனித்து இனித்து இருந்தேனடி..
பூவே..
இன்னும் ஏதேனும் குழப்பமா உன் மனதில்..
விட்டுவிடடி என்னவளே..
உனக்கெனவே நான் இருக்கிறேனடி அமுதே..
பூவுக்கும் வாசமாய் வாசம் செய்யும் இனியவளே..
உன் உயிரில் வாசம் செய்யும்
என்னுயிரும் நீதானே..
தினமும் உன் கண்ணில் கவிதைகளை வாசிக்கிறேன்..
நானோ உன்னாலேயே சுவாசிக்கிறேன்..
அன்பே..

உன் இதழின் கவிதையை எப்போது எனக்கு தருவாய்..?

20.01.1999


இன்று காலையிலே என் வானத்தின் நிலவை
நான் பார்க்கவில்லை.
இதனாலோ.. சிறு வேற்றுமை நண்பனுடன்..
நிலவும் இந்த வானத்தை பார்க்க முடியவில்லை..
அதனாலே நிலவுக்கு வான் மீது
சிறு ஊடல்..
நிலவே.. நீ வானத்துடன் ஊடல் கொண்டாலும்...
அது வானத்தை பிரிய முடியாது..
அன்பே.. உன்போன்ற பூவுக்கு
கோபம் வரலாமா..?
நேசம் கொண்ட விழிகள் நான்கும்
பார்வையால் பேச முடியாமல் போனால்...??
உன் ஊடல் எனக்கு சிரிப்பை தான் தந்தது..
அதுவும் என்மீது என்பதாலே
மனதில் மகிழ்ச்சி தான் பொங்கியது..
ஊடல் கொண்ட பூவே..
இதோ.. தென்றலாக வருகிறேன்..
உன்னை மார்போடு சேர்த்து அணைத்து
தழுவிக்கொள்ள..
மனதெல்லாம் நிறைந்தவளே..

மறுப்பேதும் உண்டா..

19.01.1999


எழுதுகோல் கொண்டு
நான் எழுத நினைப்பது எல்லாம்
உன்னையே...
எழுதுகோல் எடுக்கையிலே நான் மறப்பது
என்னையே...
இரவின் வானத்தைப் பார்க்கையில்
உன் முகமே..
பகலில் பூக்களை பார்க்கையில்
உன் முகமே...
சிவந்த வானம் தினம் பார்க்கையில்
உன் வெட்க முகம்..
வசந்தகால தென்றல் என்னை தழுவையிலே
உன் இனிமை....
உன் சுவாசத்தால் நான் உயிர் வாழ்கிறேன்..
வாடாத மலர்முகம் வாழும் வரை
என்றென்றும் மறவாது கண்மணியே..
கபடமில்ல உன் எழில் முகத்தை
காணும்போது என் மனம் குதூகலிக்கிறது தேன்மொழியே..
சொல்லிவிடும் வரையில் நான்
தினந்தோறும் துடித்தேனே..
சொன்ன பின்பு களிப்பாலே
வானத்தில் பறந்தேனே..
என்னவளே..
என்னுயிரில் கலந்து நீ இருப்பதாலே...
என்னுயிரை முன்னைவிட அதிகம்

நேசிக்கிறேன் என்னுயிரே...

18.01.1999


நினைவெல்லாம் நிறைந்திருக்கும்
நிலவழகு பூமகளே..
கனவினிலே கண் சிமிட்டி
எனை மயக்கும் இனியவளே..
இந்த பூமிப்பந்து சுற்றாமல் நின்று போகுமா?
என்னை விட்டு உன் நினைவு மறைந்து போகுமா?
உன் கண் அம்பு கொண்டு
என் இதயத்தை துளைத்தாய்..
உன் கருணை விழியால்
நீயே காயத்தை வருடிவிட்டாய்..
உன் சுட்டுவிரல் பட்டபோது
சிலிர்த்ததடி என் மேனி..
சொல்லன்னா காதல் என்றும்
உன்னிடமே எனக்குண்டு...
அன்பாலே அனைவரையும்
அரவணைத்து நீ செல்வாய்..
அன்பான என் தேவதையே..
அழகான உன் இதழில்
என்றென்றும் தவழட்டும் புன்னகை..
கற்பனைகள் என்றும் கனவாகிப் போவதில்லை..
கனவுகள் எல்லாமே காற்றோடு மறைவதில்லை..
இன்பத்தின் கேணியாக எனக்கு நீ இருக்கையிலே..
துன்பமிகு இவ்வுலகில் துயரங்கள்

எனக்கு இனி ஏது...?

16.01.1999



கடலை விட்டு எழும் அதிகாலை
இளஞ்சூரியனின் ஆரஞ்சு நிறத்தில்
நேர்த்தியோடு நீ கட்டிவந்த சேலை அழகில்..
மயங்கியே நின்றேன் இன்று..
மைபூசிய சின்னவிழிப் பார்வையாலே
என் இதயத்தை
உன் உயிரோடு பூட்டி வைத்தாயே..
உன் வெட்கப் புன்னகையில்
என்னுயிரை சுண்டி இழுத்தாயே..
இந்த வெள்ளைத்தாள்
உன்னோடான என் எண்ணங்களை
தினம் பதிவு செய்கிறது..
பூவே.. உன்னை தினமும் சுவாசிப்பதில்
இன்பம் காண்கிறேன்..
அன்பே..
உன் கண்ணில், உன் நெஞ்சில்..
உன் நினைவில்..
நானிருப்பதை எண்ணி பூரிப்படைகிறேன்..
அழகு தேவதைய.....
உன் நினைவில்லாத எழுத்து
இனியேது என்னில்..
உன் பல்வரிசை சிறுவெளியில்
எதோ ஒரு வகையில் சிக்குவதை எண்ணி
நான் தினம் மகிழ்கிறேன்..
நீ இல்லாமல் இப்பூமி..
நீ இல்லாமல் பூங்காற்று..
நீ இல்லாமல் விரிவானம்

எனக்கு எதற்கு இனியவளே..

15.01.1999


இதோ..
என் கவிதை உனக்காக..
பூவே நீ தூரத்தில் இருந்தாலும்
உன் வாசம் என்னோடு..
அதோ சூரியன் எழுகிறது
நானும் எழுகிறேன் உன் நினைவோடு..
அந்தியில் சூரியன் விழும்போது
நானும் உன் நினைவாலே..
குளிர்நிலவே உன் பார்வையில்
மழைத்துளி பட்ட சிறுமலராக
நான் சிலிர்த்து போகிறேன்..
என் காதல் தேவதையே..
அதோ கல்லறையில் உறங்கும்
உலகின் காதல் தேவதை டயானா வாழ்த்துகிறாள்..
இந்த உலகின் பொதுமொழியாகிய
அன்பானவளே..
நீ பார்க்க.. நான் பார்க்க..
நீ நினைக்க... நான் நினைக்க
நீ இன்று  நானாக..
நானின்று நீயாக..
நாமாக எப்போது..?
அந்த வானவெளி வைரமீன்கள் எல்லாம்
உன்னைக்கண்டு கண் சிமிட்டிடும்..
உன்னோடு கூட பிறக்கவில்லையே என்று..
மலர்களும் உன்னை பார்த்து பொறாமை கொள்ளும்..
உன்னைப்போல் வாடாமல் இருக்க முடியவில்லையே என்று..

நிலவே உனக்காக துடிக்கும் வானம் நானடி...

14.01.1999



பௌர்ணமியின் பால் நிலவா..
பாற்கடலின் நல்முத்தா..
நான் பார்த்தேன்
கண்களால் பருகினேன்
அழகின் பகல்நிலவே உன்னை..
கருங்கூந்தல் அது காதோடு வந்துறாச
காதிலே உன் ஜிமிக்கி சந்தம் பாட...
எனை மறந்தே நான் பார்த்தேன்..
என் இமையின் துடிப்பும் நின்றது..
இதயத்திலோ ஓரினிய அலை..
கடைக்கண் பார்வையிலே வந்த
உன் புன்னகையில் நான் மறந்தேன் பூவுலகை..
உன் கூந்தலில் சூடியிருக்கும் சிறு பூவாய் நான்..
உன் கால் கொலுசு இசைபாட..
உன் கைவளையல் கவி பாட..
உன் காதின் லோலாக்கு கண்சிமிட்ட
உன் மூக்குத்தி எனை குத்தி இழுக்குதடி..
என்னுயிரே..
உன் அழகெல்லாம் அள்ளிப்பருக
ஆவலோடு நானிருக்க..
உன் சேலையோடு என்னையும் சேர்த்து
கட்டி சென்றாயோ..
பாசத்தோடு என்னை வந்து

சேர்த்து அணைப்பாயோ..

Monday, July 18, 2016

13.01.1999



கையாலே வரையாத உயிரோவியமே..
கைத்திறனை காட்டி நீ
வரைந்த ஓவியமோ நுட்பமான அழகு..
உன் பொறுமை குணத்தோடு
மனதிறனும் சேர்ந்து கற்பனையால் வந்த
அந்த ஓவியம் வெகுநேர்த்தி..
என் நெஞ்சின் பாராட்டை
பெற்றுக்கொள்ள வாராயோ..
உயிரோவியமே நீ எனக்கு என்றானபின்
மற்றதெல்லாம் உன்போல அழகில்லை..
அழகியே..
உன்னை பார்க்க முடியாமல்
என் பார்வையால் என்ன பயன்..?
தேன்மொழி சொல்லெடுத்து
என் மனதை வருடிவிடு..
தேன் குளத்தில் விழுந்துவிட்ட தேனியைப்போல
நானும் உன்னாலே
இன்று காதல் சாகரத்தில்
கரைசேர்வேன் நீ வந்தால்..
இன்றேல்..
உலகத்தில் நானிருப்பேன்..
இந்த உலகத்தில் என் நாள் மட்டும்..
என்றென்றும் உன்

நினைவில்..

12.01.1999



பார்த்த விழி மூடவில்லை..
பால்வடியும் உன் மோகமோ
என் பார்வையிலே மறையவில்லை..
என் விழியில் கலந்துவிட்டாய்
இன்னுயிரே நீதான்..
உன் மடியில் தலை வைத்து
கண்ணுறங்கும் நாளெதுவோ..
நேரினிலே பார்க்க முடியாதோ என்ற
துன்பம் உன்னாலே விலகியது..
புகைப்படம் பார்த்துக்கொண்டே
பசி தூக்கம் நான் மறந்தேன்..
கண்மணியே இருவருமே களிப்போடு
கலந்திருக்கும் நாள் விரைந்து வந்திடுமே..
தூக்கங்கள் தொலைகிறது உன்னை
நான் நினைக்கையிலே..
துயரங்களும் விலகியது
உன் முகத்தை நினைத்தாலே..
தூக்கம் தொலைந்ததலே துயரங்கள் ஏதுமில்லை..
நன்னாள் வரும்
ஒரு பொன்னாள் வரும்
எந்நாளும் பிரிவில்லாத

மணநாளும் விரைந்து வரும்..