கடலை விட்டு எழும் அதிகாலை
இளஞ்சூரியனின் ஆரஞ்சு நிறத்தில்
நேர்த்தியோடு நீ கட்டிவந்த சேலை அழகில்..
மயங்கியே நின்றேன் இன்று..
மைபூசிய சின்னவிழிப் பார்வையாலே
என் இதயத்தை
உன் உயிரோடு பூட்டி வைத்தாயே..
உன் வெட்கப் புன்னகையில்
என்னுயிரை சுண்டி இழுத்தாயே..
இந்த வெள்ளைத்தாள்
உன்னோடான என் எண்ணங்களை
தினம் பதிவு செய்கிறது..
பூவே.. உன்னை தினமும் சுவாசிப்பதில்
இன்பம் காண்கிறேன்..
அன்பே..
உன் கண்ணில், உன் நெஞ்சில்..
உன் நினைவில்..
நானிருப்பதை எண்ணி பூரிப்படைகிறேன்..
அழகு தேவதைய.....
உன் நினைவில்லாத எழுத்து
இனியேது என்னில்..
உன் பல்வரிசை சிறுவெளியில்
எதோ ஒரு வகையில் சிக்குவதை எண்ணி
நான் தினம் மகிழ்கிறேன்..
நீ இல்லாமல் இப்பூமி..
நீ இல்லாமல் பூங்காற்று..
நீ இல்லாமல் விரிவானம்
எனக்கு எதற்கு இனியவளே..
No comments:
Post a Comment