நினைவெல்லாம் நிறைந்திருக்கும்
நிலவழகு பூமகளே..
கனவினிலே கண் சிமிட்டி
எனை மயக்கும் இனியவளே..
இந்த பூமிப்பந்து சுற்றாமல் நின்று போகுமா?
என்னை விட்டு உன் நினைவு மறைந்து போகுமா?
உன் கண் அம்பு கொண்டு
என் இதயத்தை துளைத்தாய்..
உன் கருணை விழியால்
நீயே காயத்தை வருடிவிட்டாய்..
உன் சுட்டுவிரல் பட்டபோது
சிலிர்த்ததடி என் மேனி..
சொல்லன்னா காதல் என்றும்
உன்னிடமே எனக்குண்டு...
அன்பாலே அனைவரையும்
அரவணைத்து நீ செல்வாய்..
அன்பான என் தேவதையே..
அழகான உன் இதழில்
என்றென்றும் தவழட்டும் புன்னகை..
கற்பனைகள் என்றும் கனவாகிப் போவதில்லை..
கனவுகள் எல்லாமே காற்றோடு மறைவதில்லை..
இன்பத்தின் கேணியாக எனக்கு நீ இருக்கையிலே..
துன்பமிகு இவ்வுலகில் துயரங்கள்
எனக்கு இனி ஏது...?
No comments:
Post a Comment